×

தமிழக சிறைகளில் முதன்மை தலைமை காவலர்களாக 84 பேர் பதவி உயர்வு

* சிறைத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர், பிப்.4: தமிழக சிறைகளில் 84 பேருக்கு முதன்மை தலைமை காவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், பெண்கள், மாவட்ட கிளை சிறைகள் என மொத்தம் 185 சிறைகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தலைமை காவலர்கள், முதன்மை தலைமை காவலர்களுக்கு பதவி உயர்வுக்கான தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு தமிழக சிறைகள் மற்றும் கிளை சிறைகளில் காலியாக உள்ள 84 முதன்மை தலைமை காவலர் பணியிடங்களுக்கான பதவி உயர்வுக்கான நேர்காணல் கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. நேர்காணலின் போது துப்பாக்கி கையாளுவது, சிறை நிர்வாகம், அணிவகுப்பு, கமாண்டிங், எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடந்தது.

இதில் 100க்கும் மேற்பட்ட தலைமை காவலர்கள் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து 84 தலைமை காவலர்களுக்கு முதன்மை தலைமை காவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Chief of Police ,Jails ,Tamil Nadu ,
× RELATED தமிழகத்தில் வரும் 13ம் தேதி நடைபெறும்:...