×

அச்சத்தில் வாகன ஓட்டிகள் முசிறி-குளித்தலையை இணைக்கும் ஆற்றுப்பாலத்தில் விழும் நிலையில்

முசிறி, பிப்.4: முசிறி-குளித்தலை இணைக்கும் பெரியார் பாலத்தில் விழும் நிலையில் உள்ள ஆபத்தான மின்கம்பத்தால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்தில் கடந்து சென்று வருகின்றனர். முசிறியில் இருந்து குளித்தலைக்கு செல்வதற்காக காவிரி ஆற்றின் குறுக்கே பெரியார் பாலம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த பாலத்தில் மின்விளக்கு வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம் ஒன்று வாகனம் மோதியதில் வளைந்து உடைந்த நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. பாலத்தின் வழியே செல்வோர் மீது இந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்தால் உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இது குறித்து இப்பகுதி மக்கள் மற்றும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத் துறையினர் கண்டும் காணாததுபோல் உள்ளனர். இந்தப் பாலத்தின் வழியே முசிறியில் இருந்து குளித்தலைக்கும், குளித்தலையில் இருந்து முசிறிக்கும் அரசு அலுவலர்கள் பலர் சென்று வரும் நிலையில் யாரும் இதனை கண்டு கொள்ளாமல் சென்று வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மின்கம்பம் சாய்ந்து விழுந்து உயிர்ச்சேதம் ஏற்படும் முன்பு கம்பத்தை உடனடியாக அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் தற்போதை எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Motorists ,river ,
× RELATED ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில்...