×

தைப்பூச திருவிழாவிற்கு பழனி செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு விபத்தை தடுக்க ரிப்ளெக்ட் ஸ்டிக்கர் குச்சிகள் மாநகர போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

திருச்சி, பிப்.4: திருச்சி மாநகர போக்குவரத்து போலீசார் விபத்தை தடுக்கும் விழிப்புணர்வாக பாதயாத்திரை பக்தர்களுக்கு ரிப்ளெக்ட் ஸ்டிக்கர் குச்சிகள் வழங்கி பாதுகாப்பாக செல்ல வலியுறுத்தினர். தைப்பூசத் திருவிழா வரும் 8ம் தேதி அனைத்து முருகன் கோயில்களிலும் விமர்சையாக கொண்டப்பட உள்ளது. அதில் பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து பாதயாத்திரையாக நடந்து சென்று வழிபடும் ஸ்தலமாக பழனி தண்டாயுதபாணி கோயில் விளங்குகிறது. இங்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேறியதற்காகவும், புதிய வேண்டுதலுக்காகவும் பாதையாத்திரை செல்வார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு தைப்பூசத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து தைப்பூச விழாவிற்கு பழனிக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருக்கின்றனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு திருச்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு புறப்பட்டனர். வழிவிடுமுருகன் கோயில் வழியாக சென்ற பாதயாத்திரை பக்தர்களுக்கு மாநகர போக்குவரத்து கண்டோன்மென்ட் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த போலீசார் ரிப்ளெக்ட்  ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட குச்சிகளை கொடுத்து, விபத்தை தடுக்கும் வகையில் கவனமுடன் செல்ல வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags : traffic police action ,accident ,festival ,pilgrims ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...