×

டிஆர்இயூ தொழிற்சங்கம் அறிவிப்பு ரயில்கள் தனியார் மயம் எதிர்த்து விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, பிப். 4: ரயில்கள் விற்பனை மூலம் கூடுதல் லாபம் ஈட்ட மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் ரயில்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதை எதிர்த்து விரைவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக டிஆர்இயூ முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியனின் மாநில துணை பொதுச்செயலாளர் மனோகரன் விடுத்துள்ள அறிக்கை: கடந்த 2018-19 நிதியாண்டு பயணிகள் பிரிவில் வருவாயாக ரூ. 51,067 கோடி ரயில்வே ஈட்டியது. நடப்பு 2019-20 நிதியாண்டு ரூ.56 ஆயிரம் கோடி ஈட்ட இருக்கிறது. வரும் 2020-21 நிதியாண்டு ரூ.61 ஆயிரம் கோடி இலக்காக பட்ஜெட்டில் தீர்மானித்து இருக்கிறது. அதேபோல் சரக்கு பிரிவில் 2018-19 நிதியாண்டு ரூ.1,27,433 கோடி ஈட்டியது. நடப்பு நிதியாண்டு ரூ.1,34,733 கோடி ஈட்டும். வரும் 2020-21 நிதியாண்டு ரூ.1 லட்சத்து 47ஆயிரம் கோடி வருவாய் இலக்கு நிர்ணயித்துள்ளது.

கடந்த நிதியாண்டை விட நடப்பு நிதியாண்டில் பயணிகள் பிரிவில் ரூ.4933 கோடியும், சரக்கு பிரிவில் ரூ.7300 கோடியும் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. மொத்த வருவாய் கடந்த 2018-19 நிதியாண்டு ரூ 1,89,907 ஆக இருந்தது நடப்பு நிதியாண்டு ரூ. 2,05,833 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இதனால் ரயில்வேயின் மொத்த வருவாய் தற்போது ரூ.15,926 கோடி கூடியிருக்கிறது. ரயில்வேத்துறையில் வரும் 2020-21 நிதியாண்டு. பயணிகள் பிரிவில் ரூ.5 ஆயிரம் கோடி, சரக்கு பிரிவில் ரூ.12,267 கோடி கூடுதல் வருவாய், நடப்பை விட கூடுதல் செலவு ரூ.16,775 கோடி, நடப்பு நிகர லாபம் ரூ. 3811 கோடியை விட ரூ. 492 கோடி கூடுதல் லாபம் என பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

நடப்பு 2019-20 நிதியாண்டு மொத்த செலவு ரூ. 2,05,833 கோடியாக இருக்கும் என கடந்த பட்ஜெட்டில் கணித்தது. செலவை கட்டுப்படுத்தி தற்போது ரூ.1,99,958 கோடியில் முடிக்க இருக்கிறது வரவு செலவுக்கும் இடையேயான இயக்க விகிதம் 97.3 ஆக இருந்தது 0.1 சதம் மட்டுமே உயர்ந்து 97.4 ஆக இருக்கிறது. மொத்த செலவு நடப்பு நிதியாண்டில் ரூ.1,99,958 கோடி இருப்பது 2020-21 நிதியாண்டு மொத்த செலவு ரூ2,16,733 கோடி யாக உயரும் என பட்ஜெட்டில் கணக்கிடப்பட்டு உள்ளது.
இருப்பினும் மத்திய பட்ஜெட்டில் ரயில்வே இயக்க விகிதம் வரும் 2020-21 நிதியாண்டு “96.2” என இலக்குநிர்ணயித்து இருக்கிறது. 150 ரயில்கள் தனியார் விற்பனை மூலம் ஏறத்தாழ ரூ.15 ஆயிரம் கோடி முதல் ரூ.20 ஆயிரம் கோடி வரை குத்தகை கட்டணம் கிடைக்கும். ரயில்வேயின் கட்டணமில்லா வருவாயை இது உயர்த்தும்.

ரயில்கள் விற்பனையும் பட்ஜெட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ரயில்வே காலி மனைகளை நீண்ட கால குத்தகைக்கு விடவும் நடவடிக்கைகளை துவக்கி இருக்கிறது. ரயில்வேத் துறையில் வரும் 2020-21 நிதியாண்டு ரயில்கள் விற்று கூடுதல் லாபம் காட்ட திட்டம். ரயில்கள் விற்பனையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தட்சிண ரயில்வே எம்ளாயிஸ் யூனியன் முடிவு செய்துள்ள தாக அதன் மாநில துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

Tags : union ,TREU ,
× RELATED விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5...