சாலையோரம் குடியிருப்போர் அச்சம்

பாபநாசம், பிப். 4: கும்பகோணம்- தஞ்சை மெயின்சாலையில் வேகத்தடையில் வாகனங்கள் செல்லும்போது சாலையோரம் வசிக்கும் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக குடியிருப்போர் அச்சமடைந்துள்ளனர். கும்பகோணம் -தஞ்சாவூர் மெயின் சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்தது. இந்தச் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் பாபநாசம் திருப்பாலத்துறை மெயின் ரோடு சன்னதி ரஸ்தாவில் உள்ள தரமற்ற வேகத்தடையால் அருகில் உள்ள வீடுகளின் சுவற்றில் சாலைகளில் செல்லும் வாகனங்களால் ஏற்படும் அதிர்வால் விரிசல் ஏற்படுகின்றது. எனவே வேகத்தடையின் தரத்தை உயர்த்த வேண்டும். இல்லாவிடில் பேரி கார்டு வைத்தாவது வாகனங்களின் வேகத்தை கட்டுப் படுத்த வேண்டும் என்று அப் பகுதி பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>