×

சேதுபாவாசத்திரம் பகுதியில் கோடைகாலம் துவங்கும் முன்பே அறிவிப்பு இல்லாத மின்வெட்டு

சேதுபாவாசத்திரம், பிப்.4: சேதுபாவாசத்திரம் பகுதியில் கோடைகாலம் துவங்கும் முன்பே அறிவிப்பு இல்லாத மின்வெட்டால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சேதுபாவாசத்திரம் பகுதியில் நாடியம், குருவிக்கரம்பை, கள்ளம்பட்டி, பள்ளத்தூர் ஆகிய பகுதிகளில் துணை மின் நிலையங்கள் அமைந்துள்ளது. கோடைகாலம் துவங்குவதற்கு முன்பாகவே கடந்த 10 நாட்களாக சிப்ட் முறையில் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. அதேநேரம் இந்தாண்டு பருவமழை போதுமான அளவு பெய்து ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளது.

இந்த பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் உள்ளது. இந்த ஆழ்குழாய் கிணறுகள் மூலம் பயன்பெறும் தென்னை மரங்களுக்கு இன்னும் தென்னை விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச துவங்கவில்லை. இந்நிலையில் குறைந்த அளவு மின்சாரமே தேவைப்படும் நிலையில் சிப்ட் முறையில் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக மும்முனை மின்சாரம் வழங்கவில்லை. இருமுனை மின்சாரமும் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை தான் வழங்கப்படுகிறது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் இயங்காமல் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லாடி வருகின்றனர். மின் தட்டுப்பாட்டுக்கான காரணத்தை மின்வாரிய அதிகாரிகள் கூற மறுத்து அலட்சியம் காட்டி வருகின்றனர். மின் தடைக்கான காரணத்தை போக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீருக்காக அல்லாடும் மக்கள்  பாபநாசம் பகுதியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

பாபநாசம், பிப். 4: பாபநாசம் பகுதியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாபநாசம் அடுத்த கபிஸ்தலத்திலிருந்து உம்பளாப்பாடி செல்கின்ற சாலையானது ஆங்காங்கே குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தச் சாலை அருகில் ஏராளமான குடியிருப்புகள் இருக்கின்றன. எனவே இந்தச் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேப் போன்று காவிரி பாலத்திலிருந்து படுகைக்கு செல்கின்ற சாலையும் ஆங்காங்கே பழுதடைந்திருப்பதால் இந்தச் சாலையையும் சீரமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு படுகைப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தின் முக்கியமானச் சாலைகளுள் தஞ்சை- நாகை சாலையும் ஒன்றாகும்.  இந்தச் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலையில் சாலியமங்கலம்-அம்மாப் பேட்டை இடையே சாலியமங்கலம் -உடையார் கோயில் சாலையில் முனியாண்டவர் கோயில் உள்ளது. முனியாண்டவர் கோயில் அருகில் உள்ள சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே குண்டும், குழியுமான இந்தச் சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் பூண்டி பைபாஸ் சாலை தொடங்கும் இடம், பழைய டிராவலர்ஸ் பங்களா அருகிலும் சாலை சேதமடைந்திருப்பதபால் இங்கும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Sethupavasatram ,start ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...