×

வள்ளலார் நினைவு நாளையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 8ம் தேதி விடுமுறை

புதுக்கோட்டை, பிப். 4: வள்ளலார் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு வரும் 8ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வள்ளலார் நினைவு நாளையொட்டி வருகிற 8ம் தேதி டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்திய தயாரிப்பு அன்னிய மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் பார்களில் விற்பனை நடைபெறாமலும், மூடப்பட்டும் இருக்க வேண்டும். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள், ஹோட்டல் பார்கள் ஆகியவற்றில் வருகிற 8ம் தேதி மது விற்பனை ஏதும் நடைபெறாமல் மூடப்பட்டு இருக்க வேண்டும். இவ்வாறு புதுகை கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Tags : Holidays ,Vascular Memorial Day Task Shop ,
× RELATED பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல்...