ஆதார்அட்டையில் ஆள்மாறாட்டம் திருத்தம் செய்ய முதியவரை பெங்களூருக்கு செல்லுமாறு அலைக்கழித்ததால் பரபரப்பு

பெரம்பலூர்,பிப்.4: ஆதா ரில் கூட ஆள் மாறாட்டம். சரி செய்யக்கோரி அல்லா டும் முதியவரை பெங்க ளூருவில் உள்ள ஆதார் பிராந்திய நிலையத்தி ற்குச் செல்லுமாறு கூறி யதால் முதியவர் புலம்பினார். பெரம்பலூர் மாவட்டம், குரு ம்பலூர் பேரூராட்சிக்கு உட் பட்டது மேட்டாங்காடு கிரா மம். இவ்வூரைச் சேர்ந்தவர் ராமசாமி(71).இவர் இந்திய அரசு வற்புறுத்தியதன் பே ரில் கடந்த ஆறேழு ஆண்டு களுக்கு முன்பே ஆதார் புகைப்படம் எடுத்து அடையாள அட்டையைப் பெற்று விட்டார்.அடையாள அட்டை பெற்று ஐந்தாறு வருடங்கள் பயன்பாடின்றி சும்மாவே வைத் திருந்த நிலையில், கடந்த ஆண்டு ராமசாமி தனக்கு மத்திய அரசின்மூலம், விவ சாயிகள் ஆண்டுக்கு ரூ 6 ஆயிரம் உதவித் தொகை பெறக்கூடிய பாரதப் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும்போதுதான், அட்டையி ல் வெளியிலிருக்கும் புள் ளிவிவரங்கள் ராமசாமிக்கு உடையதாகவும், உள்ளிருக்கும் கருவிழி ரேகை, கை ரேகை ஆகியன வேறு ஒரு வருக்குச் சொந்தமானதாகவும் இருப்பது தெரிய வந் தது.

இதனை சரிசெய்ய ரா மசாமி கடந்த ஓராண்டாக பெரம்பலூர் நகரின் பல்வே று இடங்களில் அமைக்கப்ப ட்டுள்ள ஆதார் மையங்க ளுக்குச் சென்று அல்லாடி வருகிறார். ஆனால் யாரும் நடவடிக்கை எடுத்த பாடி ல்லை.கடைசியில் கலெக்டர் அலு வலகத்தில் உள்ள ஆதார் மையத்திற்குச்சென்று கேட் டபோது, மேலும் அதிர்ச்சி யாக இந்த தவறை எங்க ளால் திருத்த முடியாது, ஆ தார் அடையாள அட்டைக் கான பிராந்திய அலுவல கம் அமைந்துள்ள பெங்க ளூருவுக்கே நேரில் சென்று தான் சரிசெய்து கொள்ள வேண்டும் என அசால்ட்டா க பதில் தெரிவித்துள்ள னர். இதுகுறித்து பெரம்ப லூர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொ டுத்தாலும் அதனை சரி செய்ய யாருக்கு பரிந்துரை ப்பது எனத் தெரியாமல் மனுவை வாங்க மறுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மீண் டும் கலெக்டர் அலுவலகத் திற்கு வந்த ராமசாமிக்கு ஆதரவாக, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலா ளர் ரமேஷ் மற்றும் சிலர் உடன் சென்று, மனுவை வாங்கி முதலில் பதிவுசெய் யுங்கள், பின்னர் அதனை விசாரித்து உரிய அலுவல ரிடம் நடவடிக்கைக்காக அனுப்பி வையுங்கள், வாங்காமலேயே தட்டிக்கழித்து அலைக்கழிக்காதீர்கள் என க் கூறியதைத் தொடர்ந்து ராமசாமியின் மனு பெறப் பட்டு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து ரமேஷ் தெரிவிக்கையில், தமிழகத்தில் எந்த ஒரு மூலையில் இரு ந்தும் ஆதார் அடையாள அட்டையில் திருத்தம் செய் வதற்காக பெங்களூருக்கு செல்லவேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. எனவே அத னை தொழில் நுட்பம் அறி ந்த நபரைக் கொண்டு பெர ம்பலூரிலேயே சரிசெய்து தர மாவட்ட நிர்வாகம் வி ரைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: