×

வறட்சி, வெள்ள நிவாரணமே வாங்கியதில்லை எங்களை குத்தகைதாரராக பதிவு செய்ய வேண்டும்

பெரம்பலூர்,பிப்.4: வறட்சி, வெள்ள நிவாணரமே வாங் கியதில்லை. எங்களை குத்தகைதாரராகப் பதிவு செய்ய வேண்டும். ஆண்டி குரும்பலூர் விவசாயிகள் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.பெரம்பலூர் மாவட்ட கலெ க்டர் அலுவலகக் குறை தீர்க்கும் கூட்டஅரங்கில் நேற்றுகாலை, பொதுமக் கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடைபெற் றது. இந்தக் கூட்டத்திற்கு தமிழக விவசாய சங்க மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமை யில், பெரம்பலூர் மாவட் டம் குன்னம் தாலுகா ஆண்டி குரும்பலூர் கிரா மத்தைச் சேர்ந்த தமிழக விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் மாணிக்கம் (70) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த விவசாயிகள் ராஜேந்திரன்(61), தனலட்சுமி (60), வேல்முருகன்(45) உள்ளிட்டோர் பெரம்பலூர் கலெக்டரிடம் அளித்தக் கோரிக்கை மனுவில் தெரி வித்திருப்பதாவது : நாங்கள் 15பேர் வேப்பூர் அருகே பரவாய்கிராமத் தின் மேற்கே உள்ள  வரதராஜ பெருமாள் கோ விலுக்குச் சொந்தமான 80 ஏக்கர் பரப்பளவுள்ள மா னாவாரி மானிய நிலத்தை க் கடந்த 40வருட காலமாக குத்தகை எடுத்து, பயிர் செய்து வருகிறோம்.

இது வரை யாரும் குத்தகை பாக் கி வைக்கவில்லை. குறிப்பாக கடுமையா வற ட்சி பாதித்தக் காலங்களி லும், கனமழையால் ஏற்பம் வெள்ள பாதிப்பு மற்றும் படைப்புழு தாக்குதல் போ ன்ற பாதிப்புக் காலங்களி லும் அரசு ஆணையிடும் இழப்பீட்டுத் தொகையோ, நிவாரணத் தொகையோ இதுவரை எங்களுக்கு கி டைக்கப் பெறவில்லை. இதுகுறித்து ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டக் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். அதன்படி குன்னம் தாசில் தார் மூலம் கோவில் நிர்வா கிக்கு கடந்தாண்டு அக்டோ பர் 10மற்றும் 22 ஆகிய தே திகளில் அழைப்பு கொடுத் தும் தாசில்தார் ஆஜராக வில்லை. இந்நிலையில் ஜனவரி 23 ம் தேதியில் கோவில் தக் கார் வந்து, குன்னம் தாசி ல்தாரிடம், கோவில் நிலத் தில் யாரும் குத்தகைதாரர் ஆக பதிவு செய்ய முடியாது என்று மனு கொடுத்துவிட் டார். எனவே கோயில் உயர் அதிகாரிகளை வரவழைத் துப் பேசி, எங்களை குத்த கைதாரர்களாகப் பதிவுசெ ய்து தருமாறு கேட்டுக் கொ ள்கிறோம் என அந்தக் கோ ரிக்கை மனுவில் தெரிவித் துள்ளனர்.

Tags : tenant ,drought ,
× RELATED வறட்சி, இயற்கை பேரழிவை தொடர்ந்து...