ஆண்டி குரும்பலூர் விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை பெரம்பலூர் அடுத்த எழுமூரில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, பணம் கொள்ளை

பெரம்பலூர், பிப். 4: பெரம்பலூர் அருகே எழுமூரில் 2 வீடுகளின் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ.20,600த்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா எழுமூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் பழனியாண்டி மகன் கோவிந்தசாமி (27). இவரது மனைவி பிரீத்தா (22). இவர்கள் இருவரும் சமீபத்தில் தான் வெளிநாடு சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆளில்லா வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கோவிந்தசாமி வீட்டில் வைத்திருந்த கைசெயின், மோதிரம், தோடு, டாலர் செயின் உள்ளிட்ட 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.600 ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.

இதேபோல் அதே ஊர் காலனி தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் பாண்டியன் (37) என்பவர் சென்னைக்கு சென்று விட்டார். இந்நிலையில் அவரது மனைவி செல்வியும் அருகிலுள்ள பெருமத்தூர் கிராமத்திற்கு சென்று விட்டார். இந்நிலையில் ஆளில்லா இவர்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பீரோவில் வைத்திருந்த தோடு, செயின், மோதிரம் என நாலேகால் பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு சென்று விட்டனர். ஒரே நாளில் எழுமூர் கிராமத்தில் 10 பவுன் நகை மற்றும் ரூ.20,600 திருட்டுபோன சம்பவம் கிராமத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து மங்களமேடு சப் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் விசாரணை நடத்தி வருகிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் எசனை கிராமத்தில் ஒரே ஊரில்7 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி அது அடங்குவதற்கு எழுமூர் கிராமத்தில் நடந்த கொள்ளை சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு அண்ணா நினைவு தினத்தையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு, பொது விருந்து

பெரம்பலூர், பிப். 4: பெரம்பலூர் மாவட்டத்தில் அண்ணா நினைவு தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடந்தது. இதில் கலெக்டர், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். அண்ணா நினைவு நாளையொட்டி பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயில், பெரம்பலூரில் உள்ள மதனகோபால சுவாமி கோயில், செட்டிக்குளத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நேற்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சிகள் நடந்தது.

அதன்படி சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் நடந்த சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்தில் கலெக்டர் சாந்தா, எம்எல்ஏக்கள் தமிழ்ச்செல்வன், ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டனர். மதுரகாளியம்மன் கோயிலில் நடந்த பொது விருந்தில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மதுரகாளியம்மனுக்காக சாற்றப்பட்ட புடவைகளை கலெக்டர் மற்றும் எம்எல்ஏக்கள் ஆகியோர் வழங்கினார். பொது விருந்தில் 500க்கும் மேற்பட்ட ஏழை பொதுமக்களுக்கு உணவுளிக்கப்பட்டது.  சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பூவை செழியன், பெரம்பலூர் தாசில்தார் பாரதிவளவன், கோயில் செயல் அலுவலர் பாரதிராஜா மற்றும் கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>