×

அடுத்த வாரம் போலீசார் சோதனைக்காக அடையாள அட்டையுடன் வரசொன்னதால் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி

பெரம்பலூர்,பிப்.4:சோதனையின்போது நாங்கள் கலெக்டர் அலுவலக ஸ்டாப் என்றவர்களிடம், அப்படி யென்றால் அடுத்த வாரம் வரும்போது அடையாள அட்டையுடன் வாருங்கள் என போலீசார் கூறியதால் கலெக்டர் அலுவலக ஊழி யர்கள் அதிர்ச்சியடைந்தனர். பெரம்பலூர் கலெ க்டர் அலுவலகத்தில் திங் கட்கிழமை தோறும் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகி றது. கடந்தாண்டு நெல் லை மாவட்டக் கலெக்டர் அலுவலகம் முன்பு கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒருவர் தன து மனைவி குழந்தைகளு டன் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்து தீக் குளித்துஇறந்த கொடூர சம் பவத்திற்கு பிறகு அனை த்து மாவட்டக் கலெக்டர் அலுவலகம் முன்பும் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்ப டும் திங்கட்கிழமை தோறு ம் போலீஸ் பாதுகாப்பு போ டப்படுவது வழக்கமாக உள்ளது.

குறிப்பாக பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் கொடுத்த மனுவுக்குத் தீர்வு எதுவும் காணாமல் ஆண்டுக்கண க்கில்அழைக்கப்படுவதும், காவலன் உங்கள் நண்பன் எனக்கூறும்போலீசார் மனு தாரர்களை உதாசீனப்படுத் துவது, மிரட்டிஅனுப்புவதும் மனமுடைந்த மனுதாரர்க ளை மரணத்தை நோக்கிச் செல்ல, தற்கொலைக்குத் தூண்டுகிறது. இதற்கு மு றையாகத் தீர்வுகாண முன் வராதமாவட்டகாவல்துறை தீக்குளிப்பவரைத் தடுப்ப தற்குத் தேவையான பாது காப்பு உபகரணங்களைமட் டும் கொடுத்துவிட்டு தமது பணி முடிந்ததாக நினைத் துக் கொள்கிறது. இதனால் பெரம்பலூர் மாவட்ட கலெ க்டர் அலுவலகத்தில் மாத த்திற்கு இருவர் என ஆண் டுக்கு பத்துக்கும் மேற்பட் டோர் தீக்குளிக்க முற்படு வது தீர்வு காணப்படாத நிலையிலேயே உள்ளது.

அப்பாவி மக்கள் மீது அதிக அக்கறை காட்டுவதுபோல் அதிகப் படியான போலீசா ரைக்குவித்து திங்கட்கிழ மை என்றாலே கலெக்டர் அலுவலகத்தை திணறடிக் கச்செய்யும் போலீஸாருக் கு, அடிக்கடி டிமிக்கி கொடு த்து தீக்குளிக்க முற்படும் சம்பவங்களும் அடுத்தடுத் து அரங்கேறிய படிதான் உள்ளது. குறிப்பாக கடந்த வாரம் 27,28 தேதிகளில் கலெக்டர் அலுவலக குறை தீர்க்கும் கூட்ட அரங்கிற்கு உள்ளேயே ஒருவர் தீக்கு ளிக்க முற்பட்ட சம்பவம் அனைத்துத் துறை அரசு ஊழியர்களையும் ஆடிப் போகத்தான் செய்தது. அதற்கு அடுத்த நாளும் ஒரு பெண் தீக்குளிக்க முற் பட்டார்.

இதனால் நேற்றுநடந்த திங் கட்கிழமை பொதுமக் கள் குறைதீர்க்கும் கூட்டத் திற்கு வழக்கத்தைவிட அதிகமான போலீசாரை சிறுவர் பூங்கா நுழைவு வாயில்முன்பும், அலுவலக வாயில் முன்பும் குவித்து வைத்து, தீர்வுகளைத் தேடி மனு கொடுக்க வருவோ ரை தீவிரவாதிகளைப் போ ல் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டு அனைவ ரையும் அதிர்ச்சிக்குள்ளாக் கியது.இந்தசோதனை மனு கொடுக்க வருவோருக்கு மட்டுமன்றி, கலெக்டர் அலு வலக பெருந்திட்ட வளாக த்தில் பல்வேறு துறைகளி ல் பணிபுரியும் அனைத்து நிலை அரசு ஊழியர்களுக் கும்நடத்தப்பட்டது.இதனை சற்றும் எதிர்பார்க்காத க லெக்டர் அலுவலக ஊழிய ர்கள் நாங்கள் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் என சொல்லிப் பார்த்தனர்.அத னை ஏற்காத போலீசாரோ அப்படி என்றால் அடையா ள அட்டையை காட்டுங்கள் எனக்கேட்டனர்.

அதற்கு சிலர் எங்களிடம் இதற்காக மாவட்ட நிர்வாகமே கண்டி ப்பு காட்டாத போது எங்கள் பாதுகாப்புக்காக குவிக்க ப்பட்ட நீங்கள் எங்களை ஏன் மிரட்டுகிறார்கள் என கேள்விஎழுப்பினர். இதற்கு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு என எந்த நிலையில் உள்ள போலீசாரும் எந்த பதிலை யும் தெரிவிக்கவில்லை. பெரம்பலூர் கலெக்டர் அலு வலகத்தில் 95 சதவீத ஊழி யர்கள் தங்களுக்கான அ டையாள அட்டைகளை அ ணியாத நிலையில் அடுத் து வரும் திங்கட் கிழமைக ளில் போலீசாருக்கும் அரசு ஊழியர்களுக்கும் மோத லை ஏற்படுத்தும் என்கிற அச்சம்தான் எழுந்துள்ளது. இதற்கு மாவட்டக் கலெக்ட ரோ, மாவட்ட எஸ்பியோ புரி தல் உணர்வோடு விரை ந்து தீர்வு காண வேண்டு மென்பதே அரசுத் துறையி னரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மதுர காளியம்மனுக்காக சாற்றப்பட்ட புடவைகளை கலெக்டர் மற்றும் எம்எல்ஏக்கள் ஆகியோர் வழங்கினார்.

Tags : Collector ,office staff ,check-up ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...