×

நாகை- திருச்சி சாலையில் முன்னறிவிப்பின்றி மின்சார கேபிள் ஒயர் பதிக்கும் பணியால் போக்குவரத்து பாதிப்பு

நாகை,பிப்.4: கஜா புயலின் போது காவிரி டெல்டா மாவட்டங்களில் மின்கம்பங்கள், மின்சார ஒயர்கள் என்று அனைத்தும் அதிக அளவில் பாதிப்படைந்தது. மேலும் உப்புகாற்று வீசுவதால் மின்சார ஒயர்கள் சேதம் அடைந்து அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது. இதையெல்லாம் தடுக்கும் வகையில் பூமிக்கு அடியில் மின்சார ஒயர்களை பாதிக்க திட்டமிடப்பட்டது. இதன்படி முதல் கட்டமாக வேளாங்கண்ணியில் இருந்து தொடங்கி நாகை வரை மின்சார ஒயர்கள் பூமிக்கு அடியில் புதைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக திருச்சி நாகை சாலையில் செல்லு£ர் ரவுண்டானாவில் இருந்து மேலகோட்டைவாசல் பகுதி வரை சாலையோரம் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் பள்ளம் தோண்டப்பட்டு அதில் மின்சார கோபிள் ஒயர் பதிக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த 3 தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் கேபிள் ஒயர் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு அப்படியே போடப்பட்டது. இதனால் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி விபத்தை சந்திக்க நேரிடும் அபாய சூழ்நிலை ஏற்பட்டது. பள்ளம் தோண்டியுள்ள இடத்தில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் எவ்விதமான எச்சரிக்கை பலகையும் வைக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க நேற்று காலை பொக்லைன் இயந்திரத்தில் கோபிள் ஒயர்களை எடுத்துக்கொண்டு பணியாளர்கள் வந்தனர். சாலையின் நடுவில் வாகனத்தை நிறுத்திக்கொண்டு அதில் இருந்து கேபிள் ஒயர்களை இறக்கி அதை ஏற்கனவே தோண்டியுள்ள பள்ளத்தில் போடுவதற்கு பணியாளர்கள் தயாரானார்கள்.

ஏற்கனவே பள்ளம் தோண்டியதில் குறுகிய சாலையாக மாறி எதிரே வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்து வந்த நேரத்தில் திடீரென கேபிள் ஒயர்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டதால் முற்றிலுமாக போக்குவரத்து தடைபட்டது.
நாகையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் பஸ்களும், தனியார் வாகனங்களும், இரண்டு சக்கர வாகனங்களும் மேலகோட்டை வாசல் ரவுண்டானாவில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் து£ரத்திற்கு நின்றது. அதே போல் திருச்சியில் இருந்து நாகை நோக்கி வந்த அனைத்து வாகனங்களும் பணி நடைபெறும் இடத்தில் இருந்து செல்லு£ர் ரவுண்டானா வரை சுமார் 2 கிலோ மீட்டர் து£ரத்திற்கு வரிசை கட்டிக்கொண்டு நின்றது. காலை நேரம் என்பதால் பள்ளி வாகனங்களும், வியாபாரிகளும் என அனைத்து தரப்பு மக்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி என்ன செய்வது என்று தெரியாமல் தவிர்த்துக்கொண்டு இருந்தனர். தகவல் அறிந்த டவுன் இஸ்பெக்டர் ஆனந்தகுமார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்தார்.

இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள் மீட்டு அங்கிருந்து சென்றது. இதுபோல் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் பணிகள் நடைபெறுவதை முன்னதாக அறிவித்தால் மாற்று பாதையில் வாகனங்கள் செல்ல முடியும். அல்லது இரவு நேரங்களில் பணிகளை மேற்கொண்டால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் என்று வாகன ஓட்டிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து சென்றனர்.

Tags : Nakai-Trichy Road ,
× RELATED சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் பணி