×

விவசாயிகள் வேதனை தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தினத்தன்று தமிழகம் முழுவதும் அரசு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும்

நாகை,பிப்.4: உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேக தினத்தில் தமிழகம் முழுவதும் தமிழக அரசு பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி நாகை மாவட்ட பொதுச் செயலாளர் பார்த்திபன் மனு கொடுத்துள்ளார். நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் கலெக்டர் பிரவீன்பிநாயர் தலைமையில் நேற்று நடந்தது.இதில் வந்த மனுக்கள் விபரம்:பார்த்திபன்(இந்து மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர்): ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில். இந்த கோயில் கும்பாபிஷேகம் நாளை(5ம் தேதி) நடைபெறுகிறது. இதை காண்பதற்கு உலகின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டு தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்து காட்டாக திகழும் தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேக தினத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்க வசதியாக தமிழக அரசு அன்றை தினம் பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மகாலட்சுமி நகர் பொதுமக்கள் கொடுத்த மனுவில்:  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மகாலட்சுமி நகரில் 172 வீடுகள் அரசால் வழங்கப்பட்டது. இதன் ஆவணங்கள், மின்சார ரசீது அனைத்து கலெக்டர் பெயரில் உள்ளது. இதற்கு இடையே 18 வீடுகளில் பயனாளிகள் இல்லாமல் இருக்கிறது. பயனாளிகள் இல்லாமல் இருக்கும் வீடுகள் குறித்து விசாரணை செய்ய தாசில்தார் உட்பட அனைவரிடமும் மனு கொடுத்துள்ளோம். போலீசாரிடமும் மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த 18 வீடுகளும் பூட்டியே கிடப்பதால் வெளிநபர்கள் பயன்படுத்துவதாக சந்தேகம் எழுகிறது. எனவே இந்த வீடுகள் குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags : holiday ,Tamil Nadu ,Tanjay ,
× RELATED இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை...