வைத்தீஸ்வரன் கோயிலில் தை மாத கார்த்திகை விழா

சீர்காழி, பிப்.4: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் தையல்நாயகி அம்பாள் வைத்தியநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது இக்கோயிலில் நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் மேலும் 18 சித்தர்களில் முதன்மையான தன்வந்திரி சித்தர் இக்கோயிலில் ஜீவசமாதி அடைந்துள்ளார். இக்கோயிலில் அமைந்துள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி சாமி தரிசனம் செய்தால் தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம் இத்தகைய புகழ்பெற்ற கோயிலில் தைமாத கார்த்திகை விழாவை முன்னிட்டு செல்வமுத்துக்குமாரசாமி கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளினர் பின்பு செல்வ முத்துக்குமார சுவாமிக்கு தருமபுர ஆதீனம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாரதனை நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories:

>