×

தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு ஆதரவாக செயல்படும் ஸ்டேட் வங்கியை கண்டித்து 7ம் தேதி முற்றுகை போராட்டம்

காரைக்கால் மனிதநேய மக்கள் அறிவிப்பு காரைக்கால், பிப்.4:மத்திய பாஜக அரசின் தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு ஆதரவாக செயல்படும், பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து, வரும் 7ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என காரைக்கால் மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது. காரைக்கால் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் காரைக்காலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது தலைமை வகித்தார். தமுமுக மாவட்டச் செயலாளர் கமால் ஹூஸைன், நகரத் தலைவர் முஹம்மது ஷெரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாநில செயலாளர் அப்துல் ரஹீம் கலந்து கொண்டார்.

கூட்டத்தின் முடிவில், நாடெங்கும் மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் வேளையில், மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே வழங்கிய பான் கார்டு, ஆதார் அட்டையுடன், வாக்காளர் அடையாள அட்டைகளின் நகலை, வரும் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது கண்டனத்திற்குரியது. ஸ்டேட் வங்கிகளின் இந்த செயல்பாட்டைக் கண்டித்து, வரும் 7ம் தேதி காரைக்கால் ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். என, தமுமுக மாநில செயலாளர் அப்துல் ரஹீம் அறிவித்துள்ளார்.

Tags : Siege protest ,State Bank ,
× RELATED காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டம்