×

தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு நபார்டு வங்கி நிதியுதவியுடன் 28 வகுப்பறை கொண்ட 3 மாடி கட்டிடம் கட்டி தரப்படும்

வேதாரண்யம் பிப் 4:தோப்வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு மற்றும் இலக்கிய மன்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு, ஸ்மார்ட் கிளாஸ் திறப்பு விழா, 100 சதவீதம் பெற்று தந்த ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா மற்றும் புதிய மழலையா்மாணவா்கள் சோ்க்கை துவக்க விழா என ஐம்பெரும் விழா தலைமையாசிரியா்பொறுப்பு சுவாமிநாதன் தலைமையில் நடந்தது. ஆசிரியர் ரங்கசாமி வரவேற்றார். முன்னதாக பெற்றோர் ஆசிரியா் கழக தலைவா் சுல்தானுல்ஆரிபின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னா் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு கூடுதல் தலைமையாசிரியா் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து வரவேற்றார்.. விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு 16 கணினி வழி வகுப்பறைகளை திறந்து வைத்தார். இதில் பள்ளிக் கல்வி இயக்கக துணை இயக்குநர் வேதரத்தினம், மாவட்ட கல்வி அலுவலர் உஷாசாந்தாசாய், ஆர்டி.ஓ பழனிகுமார், தாசில்தார் சண்முகம், நாகை பள்ளி துணை ஆய்வாளா் ராமநாதன், வேதாரண்யம் காவல் துணை கண்காணிப்பாளா்சபியுல்லா, பெற்றோர் ஆசிரியார் கழக பொறுப்பாளா்கள் சிவக்குமார் வீரப்பன், வைத்தியநாதன், கிராமக்கல்வி குழு சுரேஷ்பாபு, பள்ளி வளா்ச்சி குழு வரதராஜன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு போட்டிகளில் பரிசு பெற்றவா்களுக்கு பாிசுகள் வழங்கினர்.

பின்னா் நடைபெற்ற விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவில் 18 பள்ளிகளில் பயிலும் 650 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:
தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கிறது. அதன் ஒரு பகுதியாக இங்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகிறது, மேலும் மாணவா்கள் அரசு வழங்கும் சலுகைகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.

இந்த பள்ளி தொடா்ந்து 100 சதவீதம் பெற்று வருகிறது. அதற்கு பாடுபட்டு வரும் ஆசிரியா்களை பாராட்டுகிறேன். இந்த பள்ளிக்கு நபார்டு வங்கி நிதியுதவியுடன் 28 வகுப்பறைகள் கொண்ட மூன்று மாடி கட்டிடம் கட்டி தர ஆவன செய்யப்படும் இவ்வாறு அவர் பேசினார். முடிவில் ஆசிரியர் பொய்யாமொழி நன்றி கூறினார்.

Tags : building ,NABARD Bank ,Government Model Secondary School ,
× RELATED பால் பாக்கெட்டுகள் தயாரித்து...