×

விண்ணப்பிக்க அழைப்புபொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம்

கரூர், பிப்.4: சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த, சீக்கிய, பார்சியர்கள், ஜெயின்பிரிவை சேர்ந்த மதவழி சிறுபான்மையின மக்கள் சுயதொழில் மேற்கொள்ள குறைந்தவட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. புதுடெல்லியில் உள்ள சிறுபான்மையின நல அமைச்சகத்தின் கீழ்செயல்படும் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் முகவராக செயல்படுகிறது.

டாம்கோ மூலம் செயல்படுத்தும் கடன் உதவித்திட்டங்களுக்கு விண்ணப்பதாரர் 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன்உதவி வழங்கப்படும். மாவட்ட மத்திய கூட்டுறவு, நகர கூட்டுறவு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்படும். புதிய தொழில், ஏற்கனவே செய்துவரும் தொழிலை விரிவாக்கம் செய்ய கடன்உதவி பெற விண்ணப்பிக்கலாம். பரிசீலிக்கப்பட்டு பரிந்துரையுடன் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பம் அனைத்து விதத்திலும் முழுமையாக இருக்கும் பட்சத்திலும் கடன் அளிப்பதற்கான அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்யும் பட்சத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, கடன் தொகைகள் சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும். வங்கி மூலம் விண்ணப்பதாரருக்கு அளிக்கப்பட்டதும் எந்ததொழில் செய்ய கடன் பெற்றார்களோ அந்த தொழிலை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறான தகவல்கள் அளித்து கடன் பெற்றது தெரியவந்தால், கடன் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, தொகை மொத்தமாக வசூலிக்கப்படுவதோடு, எதிர்காலத்தில் எவ்வித கடன் தொகையும் கோரி விண்ணப்பிக்க முடியாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் மாவட்ட ஆட்சியரகம், மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். கல்விக்கடன், தனிநபர் மற்றும் சுயஉதவிக்குழு கடன் பெறலாம். ஆதார் அட்டை, பள்ளிமாற்றுச் சான்றிதழ், சாதி, வருமானச் சான்றிதழ், நகர்ப்புறம் ரூ.1.20,000, கிராமப்புறம் 98,000, திட்ட அறிக்கை, குடும்ப அட்டை அல்லது இருப்பிடசான்றிதழ், வங்கிகள் கோரும் தேவைவயான ஆவணங்கள். மேற்காணும் திட்டங்களின் கீழ் கரூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர்கள் டாம்கோ கடன் உதவிபெற்று பயனடையுமாறு கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Tags : Muslims ,camp ,Christians ,
× RELATED கோயில் கும்பாபிஷேகத்திற்கு பூஜை...