தேசிய அளவில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் அரசு கலை கல்லூரி சாதனை

கரூர், பிப்.4: டெல்லியில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தேசிய அளவிலான குத்துச்சண்டைபோட்டிகளில் கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்றனர். இதில் 7 பேர் தங்கப்பதக்கம் வென்றனர். மணிமேகலா 48 முதல் 51கிலோ எடைப்பிரிவிலும், மதன் 90கிலோ எடைப் பிரிவிலும், தரணி 69முதல் 75கிலோ எடைப்பிரிவிலும், சுடலை 75முதல் 80கிலோ எடைபிரிவிலும், வர்ஷன் 69முதல் 75கிலோ எடைபிரிவிலும், குகன்குமார் 52 முதல் 56கிலே எடைபிரிவிலும், மதுபாலா 64 முதல் 69கிலோ எடைபிரிவிலும் தங்கப்பதக்கம், குகன், பிரியதர்சினி ஆகியோர் வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

வெற்றிபெற்ற மாணவ மாணவியரை அரசுகலைக்கல்லூரி (தன்னாட்சி) முதுல்வர் முனைவர் கவுசல்யாதேவி, உடற்கல்வித்துறை இயக்குனர் முனைவர் ராஜேந்திரன், உடற்கல்வி பயிற்றுனர் சரவணன், நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜன், மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

Related Stories:

>