×

கரூர் அரசு காலனியில் பாலம் கட்டும் பணி மந்தம் பொதுமக்கள் கடும் அவதி

கரூர், பிப்.4: கரூர் அரசு காலனியில் சிறுபாலம் கட்டும் பணி நிறைவடையாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கரூர் அரசு காலனி சாலையில் சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்றது. மழைநீர் தேங்காமல் வடியும் வகையில் இந்த அமைப்பு உள்ளது. பிரதான சாலையில் சாலைப்பணிகள் நிறைவுபெற்றுவிட்டது. எனினும் பக்கவாட்டில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாத நிலையில் இருக்கிறது. குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டிருக்கிறது. சிறுபாலத்தின் கைப்பிடி பக்கவாட்டு சுவரும் முழுமையாக கட்டப்படவில்லை. இரவுநேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் அருகில் வந்தபின்னர் தான் பள்ளம் இருப்பதைப்பார்த்து ஒதுங்கி செல்கின்றனர். புதிதாக வருபவர்கள் தடுமாறி அவதிப்படுகின்றனர். சிறுபாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பக்கவாட்டு பள்ளத்தை மூடி பாதுகாப்பாக செல்வதற்கு அதிகாரிகள் ஆவண செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பக்கவாட்டில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாத நிலையில் இருக்கிறது. குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டிருக்கிறது.

Tags : construction ,bridge ,government colony ,Karur ,
× RELATED அறந்தாங்கி கல்லுச்சந்து சாலையில் புதிய பாலம் கட்டும் பணி நிறைவு