×

ஓமலூர் தொகுதியில் பாமக துண்டு பிரசுரம் விநியோகம்

ஓமலூர், பிப்.4: சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பாமகவினர் அன்புமணியின் லட்சியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரச்சுரம் வழங்கி பிரசாரம் செய்தனர். ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பாமக லட்சியம் அடங்கிய துண்டு பிரசுரம் விநியோகித்து பிரசாரம் செய்தனர். நிகழ்ச்சிக்கு சேலம் மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் மாணிக்கம் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணையன் பிரசாரத்தை துவக்கி வைத்தார். ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி ஆகிய ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இந்த பிரசாரம் நடைபெற்றது.

சின்னதிருப்பதியில் பாமக ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தை மாவட்ட தலைவர் மாணிக்கம் தொடங்கி வைத்தார். மாநில இளைஞரணி துணை தலைவரும், மாவட்ட கவுன்சிலருமான அண்ணாமலை, சந்திரசேகர், சின்னதம்பி, கிருஷ்ணன், சீனிவாசன், ஒன்றிய இளைஞரணி வெங்கடேஷ், ராமஜெயம், சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

Tags : Omalur ,constituency ,
× RELATED ரேஷன் கடைகளில் ரூ.1000 நிவாரணத்தொகை...