×

இடைப்பாடி சுற்றுவட்டாரத்தில் நெல் அறுவடை பணி தீவிரம்

இடைப்பாடி, பிப்.4: இடைப்பாடி அடுத்த பூலாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வெளிமாநிலம், மாவட்டத்தை  சேர்ந்த வியாபாரிகள் மற்றும் ரைஸ்மில் உரிமையாளர்கள் நேரடியாக விவசாயிகளிடம் நெல் மற்றும் வைக்கோலை கொள்முதல் செய்து வருகின்றனர். சேலம் மாவட்டம், இடைப்பாடி சுற்றுவட்டாரத்தில் காவிரிக்கரை மற்றும் கால்வாய் பாசன பகுதியான பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், தெற்கத்திக்காடு, காட்டுவளவு, மூலப்பாறை, ஓனாப்பாறை, காசிநாடு, நாவிதன்குட்டை, நெடுங்குளம், கோனேரிப்பட்டி, பூமணியூர், கல்வடங்கம், காவேரிப்பட்டி, கோனேரிப்பட்டி அக்ரஹாரம், வெள்ளாளபாளையம், தேவூர், அரசிராமணி பேரூராட்சி குளம்பட்டி, மூலப்பாதை, மலங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்தனர்.

பொங்கல் பண்டிகை தொடங்கியது முதலே, இடைப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் தொழிலாளர்கள் மற்றும் இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணிகளை விவசாயிகள் துவக்கி உள்ளனர். அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. தவிர வெளிமாநில, மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள், ரைஸ்மில் உரிமையாளர்கள் நேரடியாக விவசாயிகளிடம் மொத்தமாக நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர். கால்நடை தீவனம் மற்றும் காளான் வளர்ப்பிற்காக வெளிமாநில வியாபாரிகள் வைக்கோலை போட்டி போட்டு வாங்கிச்செல்கின்றனர்.

Tags :
× RELATED கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி விழா