×

திருச்செங்கோட்டில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம்

திருச்செங்கோடு, பிப். 4: திருச்செங்கோட்டில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. திருச்செங்கோடு மலையடிவாரம் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். ஒன்றிய செயலர் கார்த்திக் வரவேற்றார். மாநில சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் பழனிசாமி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் முருக செல்வராசன் பேசினார். மாவட்ட செயலாளர் சங்கர் தீர்மானங்களை விளக்கி பேசினார். பொருளாளர் பிரபு நன்றி கூறினார்.

கூட்டத்தில்,  தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு பொது தேர்வு, குழந்தைகளின் இடைநிற்றலை அதிகரித்து குழந்தை தொழிலாளராக்கி விடும் நிலை உள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். நாட்டின் மொத்த உற்பத்தியில் கல்விக்கு 6 சதவீதம் ஒதுக்க  வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திற்கு கடந்த ஆண்டை விட 20 சதம் கூடுதலாக நிதி  ஒதுக்க வேண்டும்.  கல்வியில் நேரடி அன்னிய முதலீடு அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். எல்ஐசி, ரயில்வே பொதுத்துறை பங்குகள் விற்பனையை கைவிட வேண்டும். மேல்நிலைத் தலைமை ஆசிரியர்களின் கீழ் தொடக்க மற்றும்  நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றும் வகையில் தமிழக அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Tiruchengode ,Elementary School Teachers' Executive Committee Meeting ,
× RELATED திருச்செங்கோட்டில் சட்டவிரோதமாக கள்...