×

ராசிபுரத்தில் 4 ஆயிரம் மூட்டை பருத்தி ₹85 லட்சத்திற்கு ஏலம்

ராசிபுரம், பிப்.4: ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 4 ஆயிரம் மூட்டை பருத்தி ₹85 லட்சத்திற்கு ஏலம் போனது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்க ஆர்.கவுண்டம்பாளையம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் நாமக்கல், ராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 4, 262 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் ஆர்சிஎச் ரக பருத்தி 3,817 மூட்டைகளும், டிசிஎச் ரக பருத்தி 450 மூட்டை என மொத்தம் 4, 262 மூட்டைகள் விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் ஆர்சிஎச் ரகம் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ₹4899 முதல் அதிகபட்சம் ₹5,682க்கு ஏலம் போனது. டிசிஎச் ரகம் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ₹6889 முதல் அதிக பட்சம் ₹7516க்கு ஏலம் போனது. மொத்தம் 4 ஆயிரம் மூட்டை பருத்தி,  ₹85 லட்சத்திற்கு ஏலம் போனது.

Tags : Rasipuram ,
× RELATED நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே...