×

உண்டு உறைவிடப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கிருஷ்ணகிரி, பிப்.4: அத்திமுகம் கிராமத்தில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடந்தது. சூளகிரி தாலுகா அத்திமுகம் கிராமத்தில் செயல்பட்டு வரும் உண்டு உறைவிடப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில் மூலிகை தாவரங்கள், கைவினை பொருட்கள், பினாயில் தயாரிப்பு, பாரம்பரிய உணவு வகைகள், அறிவியல் சம்பந்தமான உபகரணங்கள் மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த கண்காட்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுரேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு பாராட்டினார்.

பள்ளி தலைமை ஆசிரியர் மேரிரோஸ்லின் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு ஊக்கப்படுத்தினர். இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்கரன், ரேகா, மகேஸ்வரி, வித்யாலட்சுமி மற்றும் அருட்சகோதரிகள் மேரி சரோஜா, தெரசா, சின்னம்மா, அரசி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். அதியமான் வேளாண் கல்லூரி மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.

Tags : Science Exhibition ,
× RELATED வத்திராயிருப்பு பள்ளியில் அறிவியல் கண்காட்சி