×

சூளகிரி அருகே தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சூளகிரி, பிப்.4:சூளகிரி அருகே ஊழியர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து, தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சூளகிரி அருகே கள்ளுக்குறுக்கி செல்லும் சாலையில், தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சூளகிரி, ஓசூர், கிருஷ்ணகிரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், தொழிற்சாலை நிர்வாகம் கடந்த சில மாதங்களாக ஊழியர்களை பணிநீக்கம் செய்தும், ஊதியத்தை சரியாக வழங்காமல் காலம் தாழ்த்தியும் வந்தனர். தொடர்ந்து, தொழிற்சாலை ஊழியர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சூளகிரி-ஓசூர் சாலையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாலையில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : factory workers ,Sulagiri ,
× RELATED பாதுகாப்புதுறை தொழிற்சாலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்