×

ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் : தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை!!

சென்னை : ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கமல் ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன், “1995இல் ஃபோர்டு நிறுவனத்துடன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. ஏராளமான தளர்வுகளும், வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளும்நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டன. அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக விமர்சித்து இருந்தாலும் தமிழக தொழில்துறை வரலாற்றில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மிக முக்கியமானது.அடுத்தடுத்து பல தொழிற்சாலைகள் தங்கள் தயாரிப்பை தமிழகத்தில் துவங்க இந்த ஒப்பந்தம் காரணமாக அமைந்தது. தமிழக அரசின் உயர் அதிகாரிகள் பலரின் இரவு பகலாக உழைப்பு இதன் பின்னால் இருந்தது. கமிஷன் சாம்ராஜ்யத்தால் இந்த கம்பெனிகள் அல்லது தங்களுக்கு வரவேண்டிய மதிப்புக் கூட்டுவரி பங்கினை வாங்குவதற்கு கூட தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டி இருந்தது தமிழகத்தில் ஊழல் மலிந்து காட்சிகளின் துயர வரலாறு.ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் – கமல் ஹாசன் கோரிக்கை!!1996 இல் 1500 கோடி, முதலீட்டில் 4 நிறுவனம் சென்னையில் தன் தயாரிப்பை துவங்கியது . முதற்கட்டமாக சுமார் 2100 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தது. பிறகு படிப்படியாக பல அடுக்குகளாக தொழிற் சாலையை விரிவாக்கம் செய்து கொண்டது. இன்று நேரடியாக சுமார் 4000 தொழிலாளர்களுக்கும் மறைமுகமாக சுமார் 25 ஆயிரம் பேருக்கும் வாழ்வாதாரமாக இருக்கிறது.25 ஆண்டுகளுக்கு பின் எங்களுக்கு பலத்த நஷ்டம் நிறுவனத்தையும் விரைவில் மூட போகிறோம் என்று அறிவித்திருக்கிறது போர்டு நிறுவனம். நிர்வாகத்தின் இந்த திடீர் முடிவு நாளின் நிறுவனத்தின் நேரடி மற்றும் மறைமுக ஊழியர்களும் அவரது குடும்பத்தாரும் நிலைகுலைந்து போயுள்ளனர். ஏற்கனவே வேலை இல்லா திண்டாட்டம் , பொருளாதார இழப்புகள் என தமிழகம் தத்தளித்து வருகிறது. இத்தனை பேருக்கும் உடனடியாக மாற்று வாழ்வாதாரம் அளிக்க வழியில்லை. கடுமையாக முயற்சிகள் எடுத்து ஏராளமான சலுகைகளை அறிவித்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மக்களுக்கு நிரந்தரமான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க தான் . லாபம் வந்தால் எனக்கு; நஷ்டம் வந்தால் மூடி விட்டு ஓடிவிடுவோம் என்பது குறுகிய மனப் போக்கு . இது ஏற்புடையது அல்ல. இது நாள் வரை தமிழக அரசினால் அளிக்கப்பட்ட சலுகைகள், மானியங்கள் ,நீர் உள்ளிட்டவற்றிற்கு பொருளே இல்லாமல் ஆகிவிடும்.முதலீட்டை ஈர்ப்பதில் காட்டும் அக்கறையும் கவனமும் நிறுவனங்களினால் மக்களுக்கு நீண்ட கால அடிப்படையில் பலன் கிடைப்பதை உறுதி செய்வதிலும் காட்ட வேண்டும். தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நிறுவனத்தின் ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப் படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்….

The post ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் : தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Ford Company ,Kamalhasan ,Government of Tamil Nadu ,Chennai ,Kamal Hassan ,of Tamil Nadu ,Ford Enterprise ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...