×

ஓசூரில் நடைமேடை மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா

ஓசூர், பிப்.4: ஓசூர் சீதாராம் நகர் பழைய பஸ் நிலையம் அருகில் தேசிய நெடுஞ்சாலை 6  வழி பாதையை கடப்பதற்காக அமைக்கப்படவுள்ள உயர்நிலை நடைமேடை மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது. விழாவை ஓசூர் எம்எல்ஏ சத்யா துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன், முன்னாள் நகர செயலாளர் அக்ரோ நாகராஜ், நகர துணை செயலாளர் நாகராஜ், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மாணிக்கவாசகம், ராஜேந்திரன், சிவக்குமார், மகேஷ்வரன், சரவணன், திருப்பதி, ஹரிபிரசாத், பிரகாஷ், சீதாராம் நகர் வெங்கடேஷ், நாகராஜ், கிருஷ்ணன், மணி, ஆட்டோ சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், குடியிருப்பு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : foundation stone laying ceremony ,Hosur ,
× RELATED ஓசூரில் 3 இறைச்சிக் கடைகளுக்கு சீல்...