×

தர்மபுரி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட 5 கட்டிடங்களுக்கு சீல் வைப்பு

தர்மபுரி, பிப்.4: தர்மபுரி அருகே அழகாபுரியில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 5 கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தர்மபுரி இலக்கியம்பட்டி ஏரி அருகே அழகாபுரி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இலக்கியம்பட்டி ஏரி மற்றும் சனத்குமாரநதி கால்வாயின் அருகே, அரசுக்கு சொந்தமான நிலத்தில் அரை ஏக்கரில் கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமித்துள்ளதாக, கலெக்டருக்கு புகார் சென்றது. அவரது உத்தரவின் பேரில், தர்மபுரி தாசில்தார் சுகுமார், அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று சர்வே செய்தார். இதில் அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் நிலம், அரை ஏக்கரை ஆக்கிரமிப்பு செய்து, கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். நேற்று தாசில்தார் சுகுமார், போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஐந்து கட்டிடங்களையும் பூட்டி சீல் வைத்தார். இதில் ஒரு கட்டிடம் இரண்டு மாடிக்கொண்ட சொகுசு வீடு கொண்டது. சில மாதங்களுக்கு முன் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில், போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Sealing ,buildings ,Dharmapuri ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...