×

சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்க வேண்டும்

சின்னசேலம், பிப். 4: அரசு தேர்வாணைய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதையடுத்து டெட், டிஆர்பி தேர்வை நீக்கி சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று பட்டதாரி இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசு ஆசிரியர் பணிக்கு பட்டப்படிப்பு படித்த பிறகு பிஎட், எம்பில், பிஹெச்டி படிக்கின்றனர். இதில் திறமை வாய்ந்தவர்கள் மட்டும்தான் தேர்ச்சி பெற முடியும். அதிலும் குறிப்பாக அறிவியல் பட்டதாரிகள் திறமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும். அப்படி இருக்கும்போது ஆசிரியர் பணிக்கு டெட், டிஆர்பி மூலம் போட்டித்தேர்வுகள் நடத்துவது தேவையற்றது. டிஎன்பிஎஸ்சி முறைகேட்டால் டெட், டிஆர்பி தேர்வுகளின் மீதும் பட்டதாரிகளுக்கு நம்பக தன்மை போய்விட்டது. காரணம் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வெட்ட வெளிச்சத்திற்கு வந்ததே காரணமாகும். அதனால் கடந்த காலத்தில் இருந்ததுபோல சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கினாலே போதுமானது ஆகும்.

தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வில் இடைத்தரகர்களின் சித்து விளையாட்டால் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என கொத்து கொத்தாக தேர்ச்சி பெற்றவர்கள் கண்டு பிடிக்கப்பட்டிருப்பது வேதனைக்குரிய செய்தியாகும். பணம் இருந்தால் எந்த தேர்விலும் வெற்றி பெறலாம் என்ற நிலை தற்போது உள்ளதாக பட்டதாரிகள் புலம்புகின்றனர். போட்டித்தேர்வுகளை நன்றாக படித்து எழுதினால் தேர்ச்சி பெறலாம் என்ற நம்பகத்தன்மை பட்டதாரிகளிடையே போய்விட்டது. பணம் இருந்தாலே போதும் என்ற நிலையால் ஏழை, எளிய பட்டதாரி மாணவர்கள் படித்தும் வேலை இல்லையே என்ற விரக்தியில் உள்ளனர்.

ஆகையால் இனிவரும் காலத்தில் போட்டித்தேர்வுகளை முறைகேடில்லாமல் நடத்த அரசு கவனமுடன் செயல்பட வேண்டும். தற்போது தேர்வில் முறைகேடு செய்தவர்களை தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுக்கு வழியில் வேலைக்கு சென்றவர்களை கண்டுபிடித்து பணி நீக்கம் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் கடந்த காலத்தைபோலவே இடைநிலை, முதுநிலை ஆசிரியர் பணிகளுக்கு பாட வாரியாக, சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பட்டதாரி இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திண்டிவனம்: திண்டிவனத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் நடந்த சமபந்தி விருந்தில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சந்தியா, செயல் அலுவலர் ஸ்ரீகன்யா, ஆய்வாளர் சரவணன், கணக்காளர் சங்கர், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வெங்கடேசன், சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.பின்னர் அனைவரும் பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை