×

அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

விழுப்புரம், பிப். 4:  விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அண்ணா நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.  அண்ணா நினைவுதினத்தையொட்டி விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அறிவாலயம் முன்புள்ள அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், துணை செயலாளர் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை, பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், தெய்வசிகாமணி, ரவிச்சந்திரன், பொறியாளர் அணி இளங்கோ, இளைஞரணி தினகரன், மணிகண்டன், நகர துணை அமைப்பாளர் சித்திக்அலி, தொண்டரணி அமைப்பாளர் கபாலி, துணை அமைப்பாளர் அமரஜி, மகளிர் அணி தேன்மொழி, நகர நிர்வாகிகள் எஸ்சி-எஸ்டி பிரிவு குப்பன், புருஷோத்தமன், தகவல் தொழில்பிரிவு அன்பரசு, சோமு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கள்ளக்குறிச்சி:     விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட  செயலாளர் அங்கையற்கண்ணி தலைமையில் கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் உள்ள அண்ணா  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சங்கராபுரம் எம்எல்ஏ  உதயசூரியன், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர்  கென்னடி, மாவட்ட துணை செயலாளர் காமராஜ், நகர செயலாளர் சுப்ராயலு ஆகியோர்  முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர் வக்கீல் வெங்கடாசலம்,  முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அன்புமணிமாறன், மாவட்ட மாணவரணி  அமைப்பாளர் வக்கீல் அருண்பிரசாத், நகர துணை செயலாளர் அபுபக்கர், மாவட்ட  வர்த்தக அணி அமைப்பாளர் கிரிராசு, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆறுமுகம்,  முன்னாள் நகர கவுன்சிலர் பாலாஜி, வார்டு செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

செஞ்சி: செஞ்சி பஸ் நிலையத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக  சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. செஞ்சி ஒன்றிய செயலாளர்  விஜயகுமார் வரவேற்றார். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான்  எம்எல்ஏ அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது  தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செந்தமிழ்செல்வன், முன்னாள் கவுன்சிலர்கள்  நெடுஞ்செழியன், மாவட்ட பிரதிநிதிகள் ஜெயபால், காஜா பாஷா, மாவட்ட விவசாயி  துணை அமைப்பாளர் அரங்க ஏழுமலை, மாவட்ட தொழில்நுட்ப அணி அமைப்பாளர்  மொக்தியார் அலி, தொண்டரணி சோடா பாஷா உட்பட பலர் கலந்து
கொண்டனர்.

Tags : Anna Memorial Day ,
× RELATED அண்ணா நினைவு நாள் மதிமுக அமைதி பேரணி: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு