×

போலீசாரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

விருதுநகர், பிப். 4: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், புதிய தமிழகம் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமராஜ் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தேசிகாபுரம் நாட்டாமை கொலை வழக்கில் புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் ராஜலிங்கம் உள்பட 11 பேர் மீது தளவாய்புரம் போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதை கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும், கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த கோரி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நகர, ஒன்றிய நிர்வாகிகள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கடைக்காரர்களுக்கு போலீசார் எச்சரிக்கை