×

போடி அருகே சாக்கடை தடுப்புச்சுவரை சீரமைக்காததால் அவதி

போடி, பிப். 4: குடிநீர் குழாய் பதிப்பிற்காக தோண்டிய சாக்கடை தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து சீரமைக்காததால் ஒரு மாதமாக முந்தல் மக்களும், ஓட்டுநர்களும் தவித்து  வருகின்றனர்.போடி அருகே போடிமெட்டு, குரங்கணி மலையடிவார பிரிவின் மலைக்கிராமமாக முந்தல் கிராமம் உள்ளது. போடி 33 வார்டு நகர மக்களுக்கு குடிதண்ணீர் பற்றாகுறை பிரச்னையைப் போக்க புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி குரங்கணியிலிருந்து போடி பரமசிவன் மலை அடிவாரம் வரை ஒரு வருடமாக நடந்து வருகிறது.

இந்த லைன் முந்தல் காலனியினை கிராஸாவதால் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பாக நீண்ட சாக்கடை பகுதியையும், சாலையிலிருந்து நீண்ட தடுப்புச்சுவரும் இடித்து அகற்றப்பட்டது. தற்போது பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் தோண்டிய பகுதிகளை இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது. மேலும் தோண்டப்பட்ட மண்ணை குரங்கணி மலைச்சாலையில் குவித்ததால் அது மண்மேடாக சாலையை மறைத்துள்ளது.இதனால் போடியிலிருந்து குரங்கணிக்கு செல்கின்ற பஸ், வேன், கார் மற்ற விவசாய பணிகளுக்கு செல்கின்ற அனைத்து வாகனங்களும் கடக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றன. அத்துடன் முந்தல் காலனி பொதுமக்களும் காலனிக்குள் இறங்கி குடியிருப்புகளுக்கு செல்வதற்கும் திணறி வருகின்றனர்.அந்த மண் சரிவில் அடிக்கடி குழந்தைகள், முதியவர்கள் என சறுக்கி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.

அத்துடன் வாகனங்களும் அந்த இடத்தில் அடிக்கடி சிக்கி விபத்து நடந்து வருகிறது. எனவே, குழாய் பதிப்பு பணிகளும் நிறைவடைந்து ஒன்றரை மாதத்தை தாண்டி விட்ட நிலையில் தடுப்புச்சுவர் எழுப்பி படிகளையும் கட்டி போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : sewer barrier ,Bodi ,
× RELATED போடி ராசிங்காபுரத்தில் மலைபோல் மண் குவிப்பால் மக்கள் சிரமம்