×

அண்ணா நினைவு நாள் திமுகவினர் அஞ்சலி

தேனி, பிப். 4: பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி தேனி வீரபாண்டியில் ஒன்றிய திமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தேனி அருகே வீரபாண்டியில் உள்ள அண்ணா சிலைக்கு வீரபாண்டி பேரூர் கிளை செயலாளர் சாந்தகுமார் தலைமையில் ஒன்றிய திமுக பொறுப்பாளரும், ஊராட்சி ஒன்றிய சேர்மனுமான சக்கரவர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, வீரபாண்டியில் தேனி ஒன்றிய திமுக சார்பில் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தி வர்த்தகர்கள், பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில் தேனி ஒன்றிய திமுக அவைத்தலைவர் ராம்தாஸ், பொருளாளர் பைரவசாமி, தேனி ஒன்றிய கவுன்சிலர் கந்தவேல், பிசிபட்டி பேரூர் செயலாளர் செல்வராஜ், ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் முனியாண்டி, தேனி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜெகதீசன் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 அதிமுக அஞ்சலி

கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவ படத்திற்கு அதிமுகவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு நகரச்செயலாளர் ஜெகதீஸ் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் காந்தி, துணைச்செயலாளர் ஆசிக், முன்னாள் நகரச்செயலாளர் பாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். பெரியகுளத்தில் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரியகுளம்

பெரியகுளம், வடகரை பழைய பஸ்நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக மாநில விவசாய தொழிலாளர்  அணி தலைவர் எல்.மூக்கையா தலைமையில்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சரவணக்குமார் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன், நகர செயலாளர் முரளி, ஒன்றிய செயலாளர் பாண்டியன், மாவட்ட பொருளாளர் அருணாசேகர், எண்டப்புளி ஊராட்சி தலைவர் சின்னப்பாண்டியன்  உள்பட  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமையில் மாலை அணிவித்து  மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் செல்லமுத்து, அன்னபிரகாஷ், நகர துணை செயலாளர் அப்துல்சமது, கூட்டுறவு பண்டக சாலை தலைவர் அன்பு, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சிவக்குமார், கீழவடகரை ஊராட்சி துணை தலைவர் ராஜசேகர் உள்பட  கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் முத்துச்சாமி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.  நிகழ்ச்சியில் நகர செயலாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் குள்ளப்புரம் கணேசன்  கலந்து கொண்டனர். வடுகபட்டியில் எம்ஜிஆர் கழகம் சார்பில்  மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.பி.துரைராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கோம்பை
கோம்பை பேரூர் கழகம், உத்தமபாளையம் ஒன்றிய திமுக சார்பில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. உத்தமபாளையம் ஒன்றிய கழக பொறுப்பாளர் அணைப்பட்டி முருகேசன் தலைமை தாங்கி மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் கோம்பை பேரூர் தி.மு.க.பொறுப்பாளர் முருகன், மற்றும் தி.மு.க.நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Tags : Anna ,Memorial Day ,
× RELATED ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளை ஜூலை அல்லது ஆகஸ்டில் நடத்த முடிவு: