×

பெரியகுளம் நாமத்வாரில் ரதசப்தமி சிறப்பு கூட்டு பிரார்த்தனை

பெரியகுளம்,பிப்.4: பெரியகுளம் அக்கிரகாரத்தில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ரதசப்தமி மற்றும் பீஷ்மாஸ்டமி முன்னிட்டு சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. பிரார்த்தனை மையத்தில் மாதுரி சகி சமேத பிரேமிக வரதஸ்வாமிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி , குங்குமம் ஆகியவற்றால் அபிசேகம் முடித்து பின்னர் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. மதுரகீத பஜனைக்கு பின்னர் எல்லோருக்கும் எல்லாவித நன்மைகள் வேண்டி ஹரேராம மகா மந்திர சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏரானமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாமத்வார் பொறுப்பாளர் கிருஷணசைதன்யதாஸ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags : Periyakulam Namadwar ,
× RELATED உடல் தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு