×

பால்காரர் பலி

திருமங்கலம், பிப். 4: திருமங்கலம் செங்குளத்தை சேர்ந்தவர் முத்துக்காளை (55). பால் வியாபாரம் செய்து வந்தார். நேற்று மாலை இவர் வழக்கம்போல் பால் விற்பனைக்கு டூவிலரில் சென்றார். செங்குளம் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது நெல்லையிலிருந்து மதுரை நோக்கி வந்த கார் இவரது டூவிலரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். காரில் வந்த நெல்லையை சேர்ந்த ஆல்பட்டும் விபத்தில் காயமடைந்தார். 108 மூலமாக இருவரையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே முத்துக்காளை உயிரிழந்தார். ஆல்பட் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Palghar ,
× RELATED மும்பையில் பால்கர் மாவட்டத்தில்...