×

பழநி சண்முகநதி ஆற்றங்கரையில் 24 அடி உயர ஐம்பொன் வேல் பிரதிஷ்டை செய்து வழிபாடு

பழநி, பிப்.4: பழநி சண்முகநதி ஆற்றங்கரையில் 24 அடி உயர ஐம்பொன் வேல் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. பழநி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நீராடும் புண்ணிய நதியாக விளங்குவது சண்முகநதி. உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் பழநியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆறு போதிய பராமரிப்பில்லாமல் குப்பைகள் தேங்கி அசுத்தமடைந்து கிடந்தது. இதனை சுத்தப்படுத்த வேண்டுமென பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பழநியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து சண்முகநதி தூய்மை மற்றும் வழிபாட்டுக்குழு எனும் அமைப்பை உருவாக்கினர்.

இந்த அமைப்பின் சார்பில் சண்முகநதி ஆற்றுப்படுகை பக்தர்கள் நீராடும் அளவிற்கு சுத்தம் செய்யப்பட்டது. அதன்பின், மாதந்தோறும் கார்த்திகை நாளில் காசியில் ஓடும் கங்கா நதியில் நடைபெறும் ஆரத்தி பெருவிழாவில், சண்முகநதி ஆற்றிலும் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த அமைப்பின் சார்பில் சுமார் ரூபாய் 4 லட்சம் மதிப்பீட்டில் 24 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று வேலிற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதன்பின்பு, சண்முகநதி ஆற்றங்கரையில் ஆரத்தி வழிபாடு நடந்தது.

இந்நிகழ்ச்சியில் அமைப்பின் நிர்வாகிகள் பண்ணாடி ராஜா, மெய்த்தவ அடிகள் முருகன்ஜி, காணியாளர் நரேந்திரன், ஆடிட்டர் ஆனந்தகிருஷ்ணன், ஈஸ்வரபட்டா சுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Imbon Vale ,Palani Shanmuganathi River ,
× RELATED பழநி சண்முகநதி ஆற்றங்கரையில் 24 அடி உயர...