×

நீர்நிலை பகுதியிலிருந்த மரக்கன்றுகளை சேதப்படுத்திய தந்தை, மகன் மீது வழக்கு

ஒட்டன்சத்திரம், பிப். 4: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நீலமலைக்கோட்டை கிராமத்தில் உள்ள ஜோத்தளநாயக்கன் கோம்பையில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட பகுதியில் நடப்பட்ட மரக்கன்று களையும், தனியார் பட்டா நிலத்திலும் மரங்களை வெட்டி சேதப்படுத்திய அதே கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (46) மற்றும் அவரது தந்தை பழனிசாமி ஆகியோர் மீது ஒட்டன்சத்திரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேற்கண்ட பகுதியில் முந்தைய ஆட்சியரால் மதுரை உயர் நீதிமன்றம் கிளை உத்தரவு படி, மீட்கப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. இதனை ஆக்கிரமிப்பு செய்த இவர்களே கால்நடைகளை மேயவிட்டு மரக்கன்றுகளை சேதப்படுத்தி மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய முயல்கின்றனர். வரும் காலங்களில் அரசு பல லட்சங்கள் செலவு செய்து நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு எடுத்தல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அரசின் திட்டங்களை சேதப்படுத்தியவர்கள் இதுபோன்ற செயல்களில் மேலும் ஈடுபடாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : areas ,
× RELATED மாவட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கை தேவை