×

பெரும்பாறை அருகேயுள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சியை சுற்றுலாத்தலமாக மாற்ற ஆய்வு விரைவில் பணிகளை தொங்க வலியுறுத்தல்

பட்டிவீரன்பட்டி, பிப். 4: பெரும்பாறை அருகேயுள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சியை சுற்றுலாத்தலமாக மாற்ற ஆய்வு நடைபெற்றது. இதனால் விரைந்து இதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி அருகேயுள்ள பெரும்பாறை புல்லாவெளி நீர்வீழ்ச்சியினை சுற்றுலாத்தலமாக மாற்ற ஆய்வு பணிகள் நடந்தது. இந்த நீர்வீழ்ச்சியில் மழை காலம் மட்டுமின்றி வெயில் காலத்திலிலும் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும்.

இந்த அருவி மலைப்பகுதி சுற்றி பசுமையான ஆபத்தான பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ளது. நீண்ட தூரம் ஆறாக பயணித்து இந்த இடத்தில் அருவியாக பாய்கிறது. இப்பகுதியில் சாம்பல் நிற அணில், மான், காட்டுமாடு, புலி போன்ற வன விலங்குகள் உள்ளன. பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் இந்த இடத்தில் ஆபத்தும் நிறைந்துள்ளது. ஆற்றை கடப்பதற்கு ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் மரத்தினால் கட்டமைக்கப்பட்ட தொங்கு பாலம் பராமரிப்பின்றி கிடக்கிறது.

பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு மலையடிவாரத்திலிருந்து இந்த அருவி 13 கீ.மீ,. தூரத்தில் உள்ளது. இந்த அருவிக்கு செல்ல பெரும்பாறை-தாண்டிக்குடி மலை ரோட்டில் உள்ள மஞ்சள்பரப்பு என்ற இடத்திலிருந்து 300 அடி தூரத்தில் இந்த அருவி உள்ளது.

Tags : Inspection ,tourist destination ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...