×

மாநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி தீவிரம்

திருப்பூர், பிப். 4: திருப்பூரில்,  அனுமதியின்றியும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூராகவும்  அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்ற நடவடிக்கை கோரி, சென்னை  உயர்நீதி மன்றத்தில் பொது நலவழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக, நடவடிக்கை  எடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகம், மாநகர போலீஸ் மற்றும்  மாநகராட்சிக்கு, உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இது குறித்து மாநகராட்சி  அதிகாரிகள் மாநகர பகுதியில் ஆயிரத்து 191, கட்சி கொடி கம்பங்கள்  இருப்பதும், அதில் போக்குவரத்திற்கு இடையூறாக மொத்தம் 392 கட்சி கொடி  கம்பங்கள் இருப்பதை கணக்கெடுத்தனர்.

உயர்நீதி மன்ற உத்தரவை நிறைவேற்றும்  வகையில், மாநகராட்சி அதிகாரிகள் கட்சி கொடி கம்பங்களை அகற்றும் பணியில்  கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.   இதில் மாநகராட்சி முதல் மண்டலத்தில்  உள்ள வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், சாமுண்டிபுரம், சிறுபூலுவப்பட்டி,  ஆத்துப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து, 96 கட்சிக்கொடி கம்பங்களையும்,  இரண்டாம் மண்டலத்தில் உள்ள போயம்பாளையம், பாண்டியன் நகர் உள்ளிட்ட  பகுதியில் இருந்து, 30 கம்பங்களையம் அகற்றி உள்ளனர். நான்கு மண்டலங்களில்  கணக்கெடுக்கப்பட்டுள்ள அனைத்து கம்பங்களையும், வரும் 10ம் தேதிக்குள் அகற்ற  தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags : removal ,city ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்