×

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உடுமலையில் கையெழுத்து இயக்கம்

உடுமலை, பிப். 4: அனைத்து  மக்களையும் பாதிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்,  தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் எந்த முயற்சியும் எடுக்க கூடாது,  தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணியை அனுமதிக்க கூடாது என  வலியுறுத்தி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உடுமலையில்  கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் திமுக, மதிமுக, காங்கிரஸ்,  கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிடர் கழகம், தபெதிக உள்ளிட்ட கட்சிகளின்  நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கையெழுத்திட்டனர். இதேபோல்,  கடத்தூர் ஊராட்சியிலும் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் ஊராட்சி தி.மு.க  செயலாளர் கலையரசு, மருதையப்பன், மணியன், சவுந்தரராஜன், தர்மராஜன் மற்றும்  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Udumalai ,
× RELATED உடுமலையை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் கொள்ளை