×

உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.1.36 கோடிக்கு காய்கறி விற்பனை

பொள்ளாச்சி,பிப்.4:பொள்ளாச்சி உழவர் சந்தையில் கடந்த மாதத்தில் ரூ.1.36 கோடிக்கு காய்கறிகள் விற்பனையாகியுள்ளது.  பொள்ளாச்சி உழவர் சந்தைக்கு, சுற்றுவட்டார கிராமங்களில் சாகுபடி செய்யும் காய்கறிகளை, அடையாள அட்டை பெற்ற விவசாயிகள் பலரும் தினமும் நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதனால், பல்வேறு காய்கறிகளை வாங்க வாடிக்கையாளர்கள் அதிகம் வந்து செல்கின்றனர்.   கடந்த  ஆண்டில், தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி சாகுபடி செய்யப்பட்ட பல்வேறு காய்கறிகளின் விளைச்சல் அதிகமாக இருந்துள்ளது. இதனால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து காய்கறிகளின் அறுவடை தீவிரமாக இருந்ததுடன்,  உழவர் சந்தைக்கு காய்கறி வரத்து நாளுக்கு நாள் அதிகரித்தது.  

இதில் டிசம்பர் மாதம் முழுவதும் கொண்டு வரப்பட்ட காய்கறிகள் ரூ.1.32 கோடிக்கு விற்பனையானது.  ஆனால், பல்வேறு கிராமங்களில் காய்கறி அறுவடை தீவிரத்தால், உழவர் சந்தைக்கு கடந்த ஜனவரி மாதம் காய்கறி வரத்து வழக்கத்தைவிட  அதிகமாக இருந்துள்ளது. கடந்த மாதம் 466 டன் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. அவை ரூ.1 கோடியே 36 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது. அதனை சுமார் 77 ஆயிரம் வாடிக்கையாளர்கள் வாங்கி சென்றுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த...