×

புற நகர் பகுதிகளில் குவார்ட்டர் பாட்டிலை பறிக்கும் போலீசார்

ஊட்டி, பிப். 4: நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான புற நகர் பகுதிகளில் குடிமகன்களிடம் இருந்து மதுபாட்டில்களை வாங்கி உடைப்பது தொடர்ந்து நீடிப்பதால், போலீசார் மீது குடிமகன்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும்
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் உள்ள மதுக் கடைகள் அகற்றப்பட்ட நிலையில், தற்போது தொலை தூரங்களில், அதாவது 10 முதல் 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு டாஸ்மாக் கடை மட்டுமே உள்ளது. இதனால், பெரும்பாலான தொழிலாளர்கள் வேலையை முடித்துவிட்டு மதுபாட்டில்களை தங்களது வீட்டிற்கு வாங்கிச் செல்கின்றனர்.

ஆனால், புறநகர் பகுதிகளில் ஆய்வு என்ற பெயரில் சாலைகளில் நிற்கும் போலீசார், அவர்களை சோதனை செய்து ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்கு மேல் வைத்திருந்தால், அதனை பறிமுதல் செய்வது, ரூ.100 முதல் 200 வரை விலை கொடுத்து வாங்கி வரும் மதுபாட்டில்களை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், கேரள மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை சோதனை செய்யும் போலீசார், அவர்கள் மதுபாட்டில்கள் வைத்திருந்தாலும், அதனை பறிமுதல் செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்களாம். இதனால், பெரும்பாலான கேரளா மாநில சுற்றுலா பயணிகள், அதாவது இளைஞர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வருவதை தவிர்த்துள்ளனர்.
 சாலையில் நடந்துச் செல்லும், இரு சக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் ஒரு குவார்ட்டருக்கு மேல் வைத்தருந்தால் அதனை பறிமுதல் ெசய்வதும், அதனை உடைப்பது தற்போது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வழி நெடுகிலும் சோதனை என்ற பெயரில் கேரள மாநில சுற்றுலா பயணிகளுக்கு தொல்லை  தருவதையும் நீலகிரி மாவட்ட போலீசார் குறைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பது அவசியம் என சுற்றுலா பயணிகள், சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : suburbs ,
× RELATED பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும்...