×

கோபியில் காரில் திடீர் தீ விபத்து

கோபி, பிப்.4:கோபியில் பெட்ரோல் பங்க் முன்பு நிறுத்தப்பட்ட காரில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோபி வாய்க்கால் ரோட்டை சேர்ந்தவர் குமார் (50). இவர், தனது காரில் பேட்டரி மாற்றுவதற்காக நேற்று மதியம்  பேருந்து நிலையம் எதிரே உள்ள பெட்ரோல் பங்க் முன்பு காரை நிறுத்தி விட்டு மெக்கானிக்கை அழைத்து வர சென்றார். அப்போது, காரின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. அதை பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், பங்க்கில் இருந்த தீயணைப்பு கருவிகளை எடுத்து வருவதற்குள் காரின் என்ஜின் பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கோபி தீயணைப்புதுறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் காரின் என்ஜின் பகுதி முழுவதும் எரிந்து சேதமானது. உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
வாக்காளர் பட்டியல் திருத்தம் ஈரோடு, பிப்.4:வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் செய்வது குறித்து மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கருணாகரன் நேற்று ஆய்வு செய்தார். ஈரோடு மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் குறித்து அந்தந்த வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப்பணிகள் நிலை குறித்து மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், கைத்தறி துறை இயக்குநருமான கருணாகரன் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். கூட்டத்தில், சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Tags : fire ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா