×

கண்ணாடி தொழிற்சாலையில் சுவர் இடிந்து போர்ச்சுக்கல் ஊழியர் பலி

சென்னை:ஸ்ரீ பெரும்புதூர் அருகே மாம்பாக்கம் சிப்காட்டில் பிரபல கண்ணாடி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, ராட்சத புகை போக்கிகள் உள்ளன. இவற்றை சீரமைக்க  போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இன்ஜினியர் மற்றும் ஊழியர்கள் 28 பேர் கொண்ட குழுவினர் கடந்த வாரம் ஸ்ரீ பெரும்புதூர் தொழிற்சாலைக்கு வந்துள்ளனர். கடந்த இரண்டு தினங்களாக சீரமைப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மதியம் ராட்சத புகை போக்கியை இணைக்கும் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ஊழியர் கார்லோஸ் சிமோஸ் (51), என்பவர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டார். இதனைகண்ட சக ஊழியர்கள் அவரை மீட்டனர். ஆனால் சுவர் விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே  அவர் உயிரிழந்தார்.  இதுகுறித்து பெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து பெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Portugal ,glass factory ,
× RELATED வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்