×

மடிப்பாக்கம் ஏரிக்கரையில் புதிதாக அமைக்கப்பட்ட தடுப்பு வேலி உடைப்பு: குடிமகன்கள் அடாவடி

ஆலந்தூர்: மடிப்பாக்கம் கார்த்திகேயபுரம் மற்றும் ஐயப்பன் நகர் இடையே மடிப்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. சுற்றுப் பகுதி குடியிருப்புகளின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும், ஏரிக்கரையில் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்வதற்கு நடைபாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில், ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்துதல், நடைபாதை அமைத்தல், ஏரியை சுற்றி தடுப்பு வேலி அமைத்தல், இருக்கை, ஏரி நடுவில் பறவைகள் அமர்வதற்கு மண் திட்டு உள்ளிட்டவை அமைக்கும் பணி, பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்தாண்டு தொடங்கி, நடைபெற்று வருகிறது.ஏரிக்கரையில் நடைபயிற்சி செய்பவர்கள் ஏரியில் தவறி விழாமல் இருக்கவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும், ஏரிக்கரையை சுற்றிலும் நடைபாதையை ஒட்டியபடி இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டது. இந்த வேலி தரமற்ற மெல்லிய கம்பியால் அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால், மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில், சமூக விரோதிகள் சிலர் இந்த வேலையை உடைத்து,  உள்ளே நுழைந்து சமூக விரோத செயலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கார்த்திகேயபுரம் அருகே உள்ள ஏரிக்கரையில் இரவில் மது அருந்துவது, கஞ்சா புகைப்பது உள்ளிட்ட செயல்களில் சிலர் ஈடுபடுவதுடன், காலி மது பாட்டில்கள், உணவு கழிவுகளை நடைபாதை மற்றும் ஏரியில் வீசி செல்கின்றனர். இதனால், நடைபயிற்சி செல்வோர் சிரமப்படுகின்றனர். உணவு கழிவு மற்றும் மது பாட்டில்களால் ஏரி  மாசடைந்து வருகிறது. எனவே, உடைக்கப்பட்ட கம்பி வேலியை செப்பனிடவும், தரமான கம்பிகளை கொண்டு தடுப்பு வேலி அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Citizens ,Madipakkam Lake ,
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...