×

சென்னை நந்தம்பாக்கத்தில் இந்திய சர்வதேச தோல் கண்காட்சி : மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: இந்திய சர்வதேச தோல் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இதை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி தோல் மற்றும் தோல் தயாரிப்புகளின் தரம் மற்றும் நிலையான தன்மையின் அடிப்படையை மைய கருத்தாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச அரங்கில் இந்தியாவின் தோல் தொழில்துறையின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி திறனை பறைசாற்றவும், தோல் தொழிற்துறையில் இந்தியா சிறந்த முதலீடு உற்பத்தி, வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான சிறந்த நாடாகவும் இருப்பதை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கண்காட்சியில் வெளிநாட்டிலிருந்து சுமார் 130 கண்காட்சியாளர்கள், இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளிருந்து 450க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் இடம்பெற உள்ளது. முக்கியமாக சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிரேசில் நாடுகளின் அரங்குகள் இடம்பெறுகின்றன. கண்காட்சியை தோல் ஏற்றுமதி கவுன்சில், இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு மற்றும் பிற தொழில் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. மேலும் சிஎல்ஆர்ஐ, ஐஎஸ்எப், ஐஎப்எல்எம்இஏ மற்றும் இந்திய காலனி உபகரண உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவளித்துள்ளனர். மேலும் விழாவில் தமிழக அமைச்சர்கள் எம்.சி.சம்பத், கே.சி.கருப்பணன், நிலோபர் கபில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Indian International Skin Exhibition ,Nandambakkam ,Chennai ,
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...