×

பள்ளி மாணவி பலாத்காரம் பாமக பிரமுகர் போக்சோவில் கைது

கீழ்ப்பாக்கம்: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பாமக பிரமுகரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சென்னை டி.பி. சத்திரம், காமராஜர் நகரை சேர்ந்தவர் சத்யா (32), ஆட்டோ டிரைவர். பாட்டாளி மக்கள் கட்சியின் சென்னை 102வது வட்ட செயலாளர். இவருக்கு, திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே, சத்யாவுக்கு அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவியுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. அப்போது சத்யா, தனக்கு திருமணமாகவில்லை. விரைவில் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன், என்று மாணவியிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி வழக்கம் போல், பள்ளிக்கு சென்ற அந்த மாணவி, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், மகளை காணவில்லை, என கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை சத்யா கடத்தி சென்றதும், அவர்கள் இருவரும் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு விடுதியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. நேற்று முன்தினம் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், மாணவியை மீட்டனர். விசாரணையில், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை சத்யா பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது. மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர், சத்யாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED பார்க்கிங் பகுதிகளுக்கு புதிய...