×

காவேரிப்பட்டணத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள்

காவேரிப்பட்டணம், ஜன.31:  காவேரிப்பட்டணம் நகரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், பள்ளிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. காவேரிப்பட்டணம் நகரின் முக்கிய சாலையான சேலம் மெயின் ரோட்டில் பழக்கடை, மளிகைக்கடை, பாத்திரக்கடை, துணிக்கடை, எலக்ட்ரிக்கல்ஸ் உள்ளிட்ட ஏராளமான கடைகளை உள்ளன. இந்த கடைக்காரர்களில் பலர், கடைக்கு வெளியே கமார் 5 அடி தூரத்திற்கு நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து பொருட்களை வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நடைபாதையில் நடந்து செல்ல முடியாமலும், காலை மற்றும் மாலை நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாத நிலை நீடித்து வருகிறது.

மேலும், சாலையில் வாடிக்கையாளர்கள் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதேபோல், சக்தி விநாயகர் கோயில் 4 ரோடு சந்திப்பில் நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளவர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : sidewalk ,
× RELATED ஆவடி செக்போஸ்ட் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்