×

பாளேகுளி முதல் சந்தூர் வரை 28 ஏரி கால்வாயை அகலப்படுத்த வேண்டும்

கிருஷ்ணகிரி, ஜன.31: தமிழக விவசாயிகள் சங்க கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சென்னையநாயுடு, தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: காவேரிப்பட்டணம் ஊராட்சி, பாளேகுளி ஏரி முதல் வேலம்பட்டி, வீரமலை வழியாக சந்தூர் ஏரி வரை 28 எரிகளுக்கு தண்ணீர் சென்றடைய புதிய கால்வாய் அமைக்கும் பணி கடந்த 2007ம் ஆண்டு முடிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் சென்றடைவதில்லை. தண்ணீர் செல்லும் நீர்வழித்தடத்தில் வேலம்பட்டி அருகில் கட்டப்பட்டுள்ள சிமெண்ட் தொட்டி கால்வாயின் அகலம் மிக குறைவாக உள்ளது.

தமிழக அரசு கடந்த 2017ம் ஆண்டு மேற்படி சிமெண்ட் கால்வாயை விரிவுப்படுத்தும் பணிக்கு 2 கோடி ஒதுக்கியுள்ளதாக தகவல் வந்தது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. தேர்தல் சமயத்தில் மட்டும் இது குறித்து வாக்குறுதி அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் எவ்வித நடவடிக்கையம் எடுப்பதில்லை. எனவே, மீண்டும் தற்போது இந்த கோரிக்கையை முன் வைக்கிறோம். வேலம்பட்டி சிமெண்ட் கால்வாயை அகலப்படுத்தியும், ஏரிகளுக்கு செல்லும் நீர்வழித்தடங்களை விரிவுப்படுத்தியும், பாளேகுளி முதல் சந்தூர் வரை உள்ள 28 ஏரிகளுக்கும் தண்ணீர் சென்றடைய வழிவகை செய்து தருமாறு இப்பகுதி விவசாயிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சென்னையநாயுடு குறிப்பிட்டுள்ளார்.

Tags : canal ,Chandur ,Baleguli ,
× RELATED திடீர் தீ விபத்தில் 10 ஏக்கர்...