அருப்புக்கோட்டையில் 9 கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

அருப்புக்கோட்டை, ஜன.31:  அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட அமுதவல்லியம்மன் அமுதலிங்கேஸ்வரர் கோவில் உள்பட 9 கோவில்களின் மகாகும்பாபிஷேகம் நேற்று  காலை 9.30 மணியிலிருந்து 10.30 மணிக்குள் நடந்தது. 11 மணியளவில் மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.   ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட் தலைவர் சுதாகர் தலைமையில் கும்பாபிஷேக கமிட்டி  கன்வீனர்கள் பிரேம்குமார், தேவஸ்தான டிரஸ்டி கணேசன், தேவஸ்தான மேனேஜர் மணிசேகர், உறவின்முறை உபதலைவர் சுரேஷ்குமார், செயலாளர் ராஜமாணிக்கம், உதவி செயலாளர் சரவணன், பொருளாளர் கனகராஜ், எஸ்பிகே மேல்நிலைப்பள்ளி செயலாளர் காசிமுருகன், தலைவர் ஜெயகணேஷ், எஸ்பிகே கல்லூரி செயலாளர் சங்கரசேகரன், எஸ்பிகே பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் கனகராஜ், தலைவர் செந்தில்முருகன், எஸ்பிகே துவக்கப்பள்ளி செயலாளர் சரவணன், தலைவர் குமரன், எஸ்பிகே கேஎஸ்எஸ் தியாகராஜன் நினைவு மெட்ரிக்குலேசன் பள்ளி செயலாளர் சரவணன், தலைவர் கோடீஸ்வரன், எஸ்பிகே இண்டர்நேஷனல் பள்ளி செயலாளர் ராஜேஸ்குமார்,  எஸ்பிகே ஜூனியர் நர்சரி பிரைமரி பள்ளி செயலாளர் சுரேஷ்குமார், தலைவர் மயில்ராஜன், கேஎஸ்எஸ் தியாகராஜன் பௌர்ணா நினைவு டைப்ரைட்டிங் மருத்துவமனை, கம்ப்யூட்டர் சென்டர் தலைவர் சுதாகர், செயலாளர் பிரசாத், நாடார்கள் பொது சிலம்பக்கூடம் செயலாளர் ராம்குமார், தலைவர் சூரியன், முத்துமாரியம்மன் கன்சல்டன்சி தலைவர் வெங்கடேஷ், செயலாளர் தினகரன், அருப்புக்கோட்டை நாடார் லாட்ஜ் செயலாளர் தினகரன், தலைவர் பாலசுப்பிரமணி மற்றும் நாடார்கள் உறவின்முறை நிர்வாகிகள் செய்து இருந்தனர். விழாவை முன்னிட்டு எஸ்பிகே மேல்நிலைப்பள்ளி, எஸ்பிகே கல்லூரி, எஸ்பிகே துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் அன்னதானம் நடந்தது.

Related Stories:

>